நாட்டில் அதிகரித்துள்ள வறுமை காரணமாக சிறுவர்கள் மிகவும் ஆதரவற்றவர்களாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், நாட்டின் பல பரிமாண வறுமை உயர் மட்டத்தை எட்டியுள்ளதாகவும், சக்வலவில் இடம்பெற்ற சிநேகபூர்வ வகுப்பறைகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இந்த சுழற்சியில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு நேரமில்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் மதிய உணவை வழங்குவது நிர்வாகிகளின் பொறுப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த வருட இறுதிக்குள் இலங்கையிலுள்ள 10096 பாடசாலைகளில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் போஷாக்கான உணவை வழங்குவதற்கான பொறுப்பை தாம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.