எலும்பு முறிவுகளுடன் மீட்கப்பட்ட பயணிகள்
குறித்த விமானமானது மிக மோசமான நிலையில் அந்தரத்தில் குலுங்கியதாலையே விமானம் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 40 பயணிகள், பெரும்பாலானோர் லேசான காயங்களுடன் தப்பியிருந்தனர்.
அனைவரும் நடால் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில பயணிகள் எலும்பு முறிவுகளுடன் மீட்கப்பட்டதாகவும், பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் குறைந்தது நான்கு பேர் திங்கள்கிழமை பிற்பகலில் வெளியான தகவலின் அடிப்படையில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி 11.57 மணிக்கு மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து 325 பேர்களுடன் புறப்பட்ட Boeing 787-9 Dreamliner விமானமானது உருகுவே தலைநகர் Montevideo-வில் திங்களன்று விடிகாலை தரையிறங்க வேண்டும்.
ஆனால் நள்ளிரவு 2.32 மணிக்கு அந்த விமானமானது வடகிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள நடால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க கோரியுள்ளனர். Montevideo நகரில் இருந்து 4,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடால்.
இந்த நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியுள்ளதை உறுதி செய்துள்ள ஏர் யூரோபா காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
73 வயதான பிரித்தானியர்
காயங்களுடன் தப்பிய 40 பயணிகளும் ஸ்பெயின், உருகுவே, இஸ்ரேல், ஜேர்மனி மற்றும் பொலிவியா நாட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஐவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சமீப மாதங்களில் விமானங்கள் நடுவானில் குலுங்குவது அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
மே மாதத்தில் லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இதுபோன்று குலுங்கியதில் 73 வயதான பிரித்தானியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைய, பலர் காயங்களுடன் தப்பினர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் கத்தார் விமானம் ஒன்று நடுவானில் குலுங்கியதில் 8 பேர்கள் காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.