மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் நாளை (16) முதல் அமுலாகுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்நாட்டு கட்டணங்கள் 27% குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு 30%, ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 25% கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
PUCSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணக் குறைப்பு பின்வருமாறு:
0-30 அலகுகள்:
ரூ.8ல் இருந்து ரூ.6 ஆக குறைக்கப்பட்டது
31-60 அலகுகள்:
ரூ.20ல் இருந்து ரூ.9 ஆக குறைக்கப்பட்டது
0-60 அலகுகள்:
ரூ.25ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டது
61-90 அலகுகள்:
ரூ.30ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்பட்டது
91-120 அலகுகள்:
ரூ.50ல் இருந்து ரூ.30 ஆக குறைக்கப்பட்டது
121-180 அலகுகள்:
ரூ.50ல் இருந்து ரூ.42 ஆக குறைக்கப்பட்டுள்ளது
180 மேற்பட்ட அலகுகள்:
ரூ.75ல் இருந்து ரூ.65 ஆக குறைக்கப்பட்டது.