பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற காதி நீதவான் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற காதி நீதவான் கைது!


பெண்ணொருவரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


முறைப்பாட்டாளர் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணாவார். தன்னை  பராமரிப்பதற்கும், தன்னை அவமானப்படுத்தியதற்காக 80 ஆயிரம் ரூபாய் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களை முறைப்பாட்டாளர் காதி நீதவானிடம் வழங்கியுள்ளார்.


அந்த நட்ட ஈட்டை பெற்றுத்தருவதற்கு தேவையான ஆவணங்களை தயார்படுத்துவதற்காக 50,000 ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளார். ​​அதில் 10,000 ரூபாவை வரக்காமுர பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.