தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (ஜூலை 22) ஜப்பானிய வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக NPP தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்த கட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது, இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஜப்பான் விஜயத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் சுட்சுமி டாரோ, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் இவாஸ் கிச்சிரோ மற்றும் NPPயின் ஜப்பான் கமிட்டி உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.