தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல், தற்கொலை செய்து கொள்வோம் என கூறி சித்திரவதை செய்த தந்தையொருவர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் இருந்து நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர் தனது தாயாருக்கு பணம் அனுப்புவதாலும், கணவனும் பணம் அனுப்பாததாலும் சிறுவனை சித்திரவதை செய்து அதன் காணொளியை மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த காணொளியை குறித்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனது மூன்று வயது சிறுவனை காப்பாற்றுமாறு பதிவிட்டுள்ளார்.
அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.