பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை வலுப்படுத்தி தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் சான்றிழித்துள்ளார்.
பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களை குற்றமாக மாற்றி 2022 ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.