ஜூலை 1ஆம் திகதி முதல் பஸ் கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து சங்கங்கள் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.