நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையை அடுத்து, இன்று (04) பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சில பாடசாலைகளுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தென் பகுதியில் நிலவும் அதிக மழையுடனான வானிலையை அடுத்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கு நாளையும் (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு, வலய கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, தீர்மானத்தை எடுக்குமாறு வலய கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.