இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
டயனா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டு பாராளுமன்றில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.