கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாப்பிட்டிய வெரலுகம பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்ற சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனொன்று தொடர்பில் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.


குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.


இந்த கடத்தல் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் NW PK -0125 என்ற இலக்கத்தைக் கொண்ட சாம்பல் நிற வேன் ஒன்றின் படமொன்றை குளியாப்பிட்டிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


இந்த படத்தில் காணப்படும் வேன் தொடர்பில் தகவல் கிடைத்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையம் - 071 859 1260 

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் - 077 352 8325


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.