விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் நீடிப்பு!


மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்     புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகிறது என்பதால் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.


விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


2009 மே மாதம் இலங்கையில் தோல்விக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் 'ஈழம்' (தமிழர்களுக்கான சுதந்திர நாடு) என்ற கருத்தை கைவிடவில்லை என்றும், நிதி சேகரிப்பு மற்றும் ஈழத்துக்காக இரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


பரப்புரை நடவடிக்கைகள் மற்றும் எஞ்சியிருக்கும் புலிகளின் தலைவர்கள் அல்லது அங்கத்தவர்கள் சிதறிய செயற்பாட்டாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த அமைப்பினை மீண்டும் எழுப்புவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.


"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்/கூறுகள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.


இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான சிதைவை மேற்கொள்வதற்கான செல்வாக்கைக் கொண்டிருக்கும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.