முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயானா கமகே இரட்டைக் குடிமகன் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தனது எம்பி பதவியை நேற்று இழந்தார்.
இந்நிலையில், இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக அறிய முடிகின்றது.