2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், விஞ்ஞான வினாத்தாளின் வினாக்கள் பாடத்திட்டத்துக்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.