மல்வானையை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட, மொகமட் ரவுப் மொகமட் ஹாதிம் மற்றும், யஹ்கூப் லெப்பை சித்தி அயிஷா தம்பதிகளின் புதல்வரான மொஹமட் ஹாதிம் ஷாபி ஹுஸைன் அவர்கள், கடந்த 06 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் முன்நிலையில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் ஆரம்ப காலமாணவரான இவர், தனது உயர்தர வகுப்புக்கான கல்வியை டி.எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் மேற்கொண்டார். பின்னர்
ஜாமியா நழீமீயா கலாபீடத்தில் பட்டப் படிப்பை முடித்த பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியும் ஆவார்.
தற்போது அரச அதிகாரியாக கடமை புரியும் இவர் கடந்த ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் இவரது பணிகள் சமூகத்திற்கு தொடரட்டும் தொடர்ந்தும். வாழ்துக்கள்.
பேருவளை ஹில்மி