எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 950.00 ரூபாவுக்கும்,
பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 250.00 ரூபாவுக்கும்,
ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 450.00 ரூபாவுக்கும்,
ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
குறித்த பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.