ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக நம்பப்படும் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடி மற்றும் டிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.