காதலனை கடத்திய 17 வயது காதலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலனை கடத்திய 17 வயது காதலி!


மஹகம - பொலேகொட பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளை அவர் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. 


பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த இளைஞன் அவரது காதலியின் வீட்டில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.


இந்த இளைஞனை பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தை இன்று மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.