தியதலாவை கார் பந்தயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (15) 8.30 அளவில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த கார் பந்தயத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08ஆக அதிகரித்துள்ளது.