துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்கின் உதவியாளர்கள் இருவர் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னிப்பிட்டிய ருக்மல்கம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயது நபரொருவரும் 45 வயது பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள், 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் கார் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.