முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில் கொழும்பில் கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.