இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்!


இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ஆம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதி பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.


இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.


கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இலங்கை கடன்களை 15 வருடங்களிற்குள் மீள செலுத்த வேண்டியிருக்கும். 2028 முதல் 2043ம் ஆண்டிக்குள் என தெரிவித்துள்ள அவர், இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் கடன்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்


இலங்கை 2022 ஏப்பிரலில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது. இதன் மூலம் இலங்கை தன்னை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியது.


2023 ஏப்பிரலில் கூட்டத்தில் இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகள் குழு ஏற்படுத்தப்பட்டது சீனாவிற்கு பின்னர் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடான ஜப்பான் இந்தியா பிரான்சுடன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது.


இலங்கை கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்தி வைப்பது தொடர்பிலும் வட்டியை செலுத்துவது தொடர்பிலும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 


சீனா இந்த கூட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் கலந்துகொண்டுள்ளது 


எனினும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு நாடுகள் ஏனைய நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பை ஒத்ததாகவே காணப்படும் என தெரிவித்துள்ள இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.


2023ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் 37.3 பில்லியன் டொலராக காணப்பட்டது. இதில் சீனாவிற்கு 4.7 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும்.


2017 இல் இலங்கை தனது தென்பகுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது .


இது கடன்களை வழங்குவது தாமதமானால் உட்கட்டமைப்பு திட்டங்களை கைப்பற்றும் கடன்பொறிக்கான உதாரணமாக கருதப்பட்டது.


இலங்கையை தளமாக கொண்டு இந்தோ பசுபிக்கில் சீனா அகலக்கால்பதிப்பது குறித்து இந்தியா ஜப்பான் உட்பட இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் சில கவலை கொண்டுள்ளன.


எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை முற்றிலும் வர்த்தக நோக்கங்களை கொண்டது என தெரிவித்த சாகலரத்நாயக்க, இதில் இராணுவ நோக்கம் எதுவுமில்லை; இலங்கை வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக உள்ளது; நாங்கள் எந்த நாடு என்ற அடிப்படையில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில்லை; தேசிய பாதுகாப்பிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தினால் மாத்திரம் அது குறித்து கரிசனை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.


எனினும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுதக்கூடிய நாட்டின் வடபகுதி குறித்து நாங்கள் கவனத்துடன் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.