ஜனாதிபதியாக நாமல் இன்னும் தயார் நிலையில் இல்லை! –மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியாக நாமல் இன்னும் தயார் நிலையில் இல்லை! –மஹிந்த


நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். 


செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, தனது மகன் இன்னும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தனது மகனுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக தான் கருதுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு வேட்பாளரை முன்னிறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் கட்சி சரியான நேரத்தில் கலந்துரையாடும் எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.