ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.
தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த எம்.பி., இதற்கு முன்னர் பதவிய பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியவர்.
அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)