தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு சராசரியாக 17,014 ரூபாயாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பரில் இதன் மதிப்பு 16,524 ஆக பதிவானது.
ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாவட்ட மட்டத்தில் மாதாந்தச் செலவு கணக்கிடப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களே அதிக செலவினங்களைச் சுமக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு 18,350 ரூபாயாகவும், கம்பஹா மாவட்டத்தில் 18,256 ரூபாயாகவும், நுவரெலியா மாவட்டத்தில் 17,892 ரூபாயாகவும் உள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மொனராகலை மாவட்டத்திலிருந்து மிகக் குறைந்த தனிநபர் செலவீனம் பதிவாகியுள்ளதுடன் அது 16,268 ஆகும்.
உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி தேசிய மற்றும் மாவட்ட அளவில் விலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு சரிசெய்யப்படுகிறது.