இந்திய இலங்கை நட்புறவு ஒன்றியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10), கண்டியில் நடாத்திய "மலையகம் 200" விருது வழங்கும் நிகழ்வின் போது, கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற ஆசிரியையும் பன்னூலாசிரியரும், இலக்கிய ஆளுமையுமான இவர், முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய மாகாண சபை முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்க உட்பட்ட அதிதிகளிடமிருந்து இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.
சிறந்த இலக்கிய பெண் ஆளுமையான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு இவ்விருது கிடைத்தமையையிட்டு, இலக்கிய வட்டத்தினர் பலரும் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி பாராட்டு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்