இன்று (29) முதல் நாளை மறுநாள் (31) வரை கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையில் ரயில் சேவை ஒரு தண்டவாளத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் குழாய் ஒன்றின் பராமரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.