சர்ச்சைக்குரிய உடலுறவு சட்டமூலம் மீளப் பெறப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சைக்குரிய உடலுறவு சட்டமூலம் மீளப் பெறப்பட்டது!


நாட்டில் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது  விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையிலான சட்டமூலம் தொடர்பில் அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.


இந்நிலையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த குறித்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (23) தெரிவித்துள்ளார். 


கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


"பெரும்பாலானோர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரினார். இது குறித்து தொடர்ந்து கலந்துரையாடப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என சட்டமா அதிபருக்கு அறிவித்தேன். 


மாறாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்திலும் இது மீளபெறப்படும்" என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.