மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றின் விடுதியின் ஒரு பகுதி தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மாத்தறை வெலிகம ஹப்ஸா மகளிர் அரபிக் கல்லூரியில் நேற்று (03) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் இருந்த சுமார் 150 மாணவர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மாணவர்களின் படுக்கையறைகள் அடங்கிய விடுதியின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவத்தில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. (யாழ் நியூஸ்)
Ladies school hostel destroyed in Weligama fire https://t.co/A3NznW0KYk pic.twitter.com/GtZRVVkZEP
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) March 4, 2024