பங்களாதேஷ் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷ் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் வணிகம் மற்றும் குடியிருப்பாளர்கள் வசித்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் தெரிவித்தார்.

தலைநகர் டாக்காவில் வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி சுமார் 22:00 மணியளவில் கச்சி பாய் உணவகத்தில் தீப்பிடித்தது. இத் தீ கட்டிடத்தின் வழியாக வேகமாக ஏழு மாடிக்கும் பரவியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
header ads


தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 33 பேர் இறந்துவிட்டதாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் தெரிவித்தார்.

நகரின் பிரதான தீக்காய மருத்துவமனையில் குறைந்தது 10 பேர் இறந்தனர். மேலும் டஜன் கணக்கானவர்கள் சிகிச்சைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று சமந்தா லால் சென் கூறினார்.

கட்டிடம் இருக்கும் வளாகத்தில் மற்ற உணவகங்கள் மற்றும் பல ஆடை மற்றும் மொபைல் போன் கடைகள் உள்ளன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.