பிரபல நடிகையிடம் 2000 கோடி ரூபா நட்டஈடு கோரும் ஊடக நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல நடிகையிடம் 2000 கோடி ரூபா நட்டஈடு கோரும் ஊடக நிறுவனம்!


இலங்கையின் முன்னணி நடிகையான மகேஷி மதுங்காவிடம் 2000 கோடி ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளது.


இலங்கையின் முன்னணி ஊடக வலையமைப்பு ஒன்றின் தலைவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


சட்டத்தரணி ஊடாக நிபந்தனைக் கடிதம் ஒன்றின் மூலம் பிரபல ஊடக நிறுவனத்தின் தலைவரான ரெய்னோ டி சில்வா 2000 கோடி ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.


தமது ஊடக நிறுவனத்திற்கும், தமக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களின் வாயிலாக பிரச்சாரம் செய்தாக மகேஷி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.


குறிப்பிட்ட நட்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறினால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அண்மைய நாட்களாக மகேஷி குறித்த ஊடக நிறுவனத்தின் மீதும் ஊடக நிறுவனத் தலைவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.


தமது நிர்வாண புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டுவதகாவும், கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பில் அண்மையில் அவர் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார்.


இவ்வாறான பின்னணியில் மகேஷிடம் 2000 கோடி ரூபா நட்டஈடு கோரி ரெய்னோ சில்வா கடிதம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.