
Reliance Industries மற்றும் Walt Disneyயின் இந்திய ஊடக சொத்துக்களை இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் நிறுவனத்தின் குழுவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் Bloomberg வெளியிட்ட அறிக்கையில், 'ஊடக செயல்பாடுகளை ஒன்றிணைப்பதற்கான பிணைப்பு ஒப்பந்தத்தில் டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
இணைக்கப்பட்ட நிறுவனத்தில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் 61 சதவீதத்தை வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மீதமுள்ளவை டிஸ்னி வைத்திருக்கும்.' என தெரிவிக்கப்பட்டது.
இன்னொருபுறம், Reuters வெளியிட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் 51-54 சதவீத பங்குகளை வைத்திருக்கும், ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் ஷங்கர் ஆகியோரின் கூட்டு நிறுவனமான Bodhi Tree 9 சதவீத பங்குகளையும், டிஸ்னி 40 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக திட்டங்கள் மாறக்கூடும் என கூறப்படுகிறது. இந்த அறிக்கை குறித்து ரிலையன்ஸ் அல்லது டிஸ்னி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
நீதா அம்பானி சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாரியத்தில் இருந்து விலகி, அறக்கட்டளையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
நீதா அம்பானி, மும்பையில் உள்ள Nita Mukesh Ambani Cultural Centreன் நிறுவனர் ஆவார், இது இசை மற்றும் நாடகத்திற்கான முக்கிய இடமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.