இலங்கையில் அமைக்கப்படவுள்ள பிரபல IIT தொழில்நுட்பக் கழகம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் அமைக்கப்படவுள்ள பிரபல IIT தொழில்நுட்பக் கழகம்?


IIT எனும் பிரபல இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மூன்றாவது கடல்சார் வளாகம் இலங்கையில் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


இலங்கையில் IIT அமைப்பதற்கான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் கடந்த நவம்பரில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


ஆதாரங்களின்படி, இந்த திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் IIT மெட்ராஸ் உடன் தொடர்பில் உள்ளது.


இதன்படி எதிர்கால திட்டம் பற்றி விவாதிக்க உயர்மட்டக் குழு சமீபத்தில் சென்னை வளாகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.


இதன்படி, வளாகம் கண்டியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை வளாகத்திற்கான திட்டம் நிறைவேறினால், அது, IIT மெட்ராஸின் இரண்டாவது சர்வதேச வளாகமாக இருக்கும். இந்நிலையிலேயே IITயின் மூன்றாவது வளாகம்; இலங்கையில் அமைக்கப்படும் வாய்ப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.