பிரபல இந்திய நடிகை பூனம் பாண்டே (32) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே கர்பப்பை புற்றுநோயால இன்று (02) காலை இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால் நிர்வாணமாக விடியோ வெளியிடுகிறேன் எனக் கூறி பின்னர் கூறியபடி செய்தும் பிரபலமானவர் பூனம் பாண்டே.
மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் சினிமாவில் 2013இல் நஷா எனும் ஹிந்தி சினிமாவில் நடித்து மீண்டும் சர்ச்சைக்குள்ளானார். அவரது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்.
இதையும் படிக்க: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த குறிச்சி மடதாபெட்டி பாடல்!
2012இல் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது அரை நிர்வாண விடியோ வெளியிட்டு மீண்டும் வைரலாகினார்.
இந்நிலையில் இன்று காலை காலமாகியுள்ளது பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அவரது மேலாளர் பதிவிட்டுள்ளார்.
32 வயதிலே இறந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (இந்திய ஊடகம்)