சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட முன்னைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களை இலங்கை குவித்தது.

அந்த மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக பதவானது.

பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசி 10ஆவது வீரராக இரட்டைச் சதம் குவித்தார்.

பெத்தும் நிஸ்ஸன்க, 88 ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோவுடன் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களையும் 44 ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 3ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

🔺 LIVE: AFG 19/3 in 5.2 Overs (01:50GMT)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.