TIN சான்றிதழை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்கு முன், நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், TIN சான்றிதழை பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது நபரிடமிருந்தோ நீங்கள் சேவையைப் பெறவில்லை என்றால், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தைத் தவிர எந்தவொரு தரப்பினருக்கும் உங்களின் தனிப்பட்ட முக்கியமான தகவல்களை வழங்க வேண்டாம்.
TIN சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக கீழ் காணும் ஆவணங்களை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து தயார்படுத்திக் கொள்ளவும்.
- தேசிய அடையாள அட்டை இலக்கம் / சாரதி அனுமதிப் பத்திரம்/முதியோர் அட்டை
- உங்களுடைய நிரந்தர முகவரி தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்து வேறுபட்டிருந்தால், உங்கள் பெயரில் வழங்கப்பட்ட நீர் அல்லது மின்சாரக் கட்டண பட்டியல்/ நிலையான தொலைபேசி கட்டண பட்டியல் / கிராம சேவையாளர் சான்றிதழுடன் தொடர்புடைய முகவரியை உறுதிப்படுத்தவும்.
- நீங்கள் பதிவு செய்யப்பட்ட தனியார் வியாபாரத்தின் உரிமையாளராயின் அந்த வியாபார பதிவினை உறுதிசெய்ய வேண்டும்.
முதலாவது படிமுறை
TIN சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் இலத்திரனியல் கட்டமைப்பிற்குள் பிரவேசிக்க வேண்டும்.
இரண்டாவது படிமுறை
- 'Registration Type' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் 'INDIVIDUAL LOCAL' என்பதைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
- அருகிலுள்ள Nearest Regional Office என்ற பகுதியை நிரப்ப வேண்டாம்.
- CONTACT NUMBER என்ற பிரிவில், பயன்பாட்டில் உள்ள உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் மின்னஞ்சல் முகவரியையும் சரியாக உள்ளிடவும்.
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது BANK INFORMATIONஐ வழங்க வேண்டிய அவசியமில்லை.
குறித்த பகுதியை நிரப்புவதும் அல்லது நிரப்பாமல் விடுவதும் உங்கள் முடிவு.
- நீங்கள் திருமணமானவராக இருந்தால் FAMILY INFORMATIONஇல் நிரப்ப வேண்டிய விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- நீங்கள் தனிப்பட்ட வணிக உரிமையாளராக இருந்தால், INDIVIDUAL BUSINESS என்ற இடத்தில் உங்கள் வணிக விபரங்களை சரியாக உள்ளிடவும்.
மூன்றாவது படிமுறை
- Supporting Documents என பெயரிடப்பட்ட பிரிவில் நீங்கள் தயாரித்த தேசிய அடையாள அட்டையைச் சேர்க்கவும்.
- Purpose of Registration என பெயரிடப்பட்ட பகுதிக்கு Tax Purpose என தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் ‘Next’ button ஐ click செய்யவும்.
நான்காவது படிமுறை
நீங்கள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை இப்போது காண்பீர்கள்.
- தகவல் மாறக்கூடாது என்றால் DECLARATION பிரிவை நிறைவுசெய்து, அதன் அருகில் காட்டப்பட்டுள்ள சரிபார்ப்புக் குறியீட்டை (Submit) உள்ளிடவும்.
- உங்களின் TIN சான்றிதழ் மற்றும் PIN இலக்கம் 5 அலுவலக நாட்களுக்குள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.