இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று கொழும்பில் இருந்து ஆரச்சிக்கட்டுவவிற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று கொழும்பில் இருந்து ஆரச்சிக்கட்டுவவிற்கு!

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று ஆரச்சிக்கட்டுவவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சடலம் நேற்றைய தினம் பொரளையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று முற்பகல் 10.30 மணி வரை சடலம் அங்கு வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் சடலம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

போராட்டத்தின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்டதையடுத்து, சடலத்தை அவரது அலுவலகத்தில் அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கென தனி இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

சடலத்தின் இறுதிக் கிரியைகள் ஆராச்சிக்கட்டுவ - ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் நாளை இடம்பெறவுள்ளன.

முந்தினம் இராஜாங்க அமைச்சர் கொழும்புக்கு வந்து கொண்டிருந்த போது, ​​அவர் பயணித்த ஜீப் கொள்கலனுடன் மோதியதில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரைப் பாதுகாத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் உயிரிழந்தனர்.

விபத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொள்கலன் காரின் சாரதி இன்று வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பில் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.