வக்புசபை கலாச்சார அமைச்சு ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறியதை எதிர்த்து வக்புசபை முன்பாக ஆர்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வக்புசபை கலாச்சார அமைச்சு ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறியதை எதிர்த்து வக்புசபை முன்பாக ஆர்பாட்டம்!


சவூதி அரேபியாவைச் சேர்ந்த பாபக்கர் அவர்களால் பள்ளிவாசல் ஓன்றை அமைக்க, வாங்கி முஸ்லிம் சமூகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சுமார் 50 கோடி பெருமதியான காணியின் ஆவணங்களில்  திருத்தங்களை மேற்கொண்டு, சில உலமாக்கள் உற்பட இன்னும் சிலர் அபகரிக்க முற்பட்ட சில உண்மைகளை தெஹிவளை மக்கள் அண்மையில் வெளிப்படுத்தி இருந்தனர் .


இதை அபகரித்து  விற்பனை செய்வதற்கு எதிராக கல்கிஸ்ஸை மாவட்ட நீதி மன்றத்திலும்,  இதை வக்பு சொத்தாக, பள்ளிவாசலாக பதிவு செய்ய எடுத்த முயற்சியை வக்பு சபை பல வருடங்களாக அமுல்படுத்தாததின் காரணமாக வக்பு சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமனாறத்திலும், தெஹிவளை மக்கள் வழக்குகளை பதிவு செய்திருந்தனர். அத்தோடு மஹல்லாவாசிகள் ஒன்பது பேரை பெயரிட்டு பதிவு செய்யப்படும் பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்பாளர்களாக நியமிக்கும் படி வேண்டியும் பொதுமக்கள் வழக்கை தொடர்ந்தனார்.


இவ்வழக்குகள் இரண்டிலும் இது. பள்ளிவாசல் அல்ல என்றும்,  தனிநபர் சொத்து என இவ் அபகரிப்பாளர்கள் வாதடி வந்தனர். 


கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பொதுமக்களின்  கோரிக்கையையும் சாட்சியங்களையும் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அபகரிப்பாளர்களின் தனியார் சொத்து என்ற மனுவை நிராகரித்ததோடு, இது பாது காக்கப்படவேண்டிய பொதுச் சொத்து என முடிவு செய்து, இதை ஒரு பள்ளிவாசலாக வக்பு சொத்தாக  பதிவு செய்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி கலாச்சார அமைச்சிக்கு உத்தரவிட்டது. கௌரவ நீதிமன்றத்தின் முன்னிலையில் முஸ்லிம் திணைக்களங்கள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற சிரம் தாழ்த்தி ஒப்புக்கொண்டது. 


இந்நிலையில் இது தொடர்பான திணைக்களங்கள் நீதிமன்றத்தின் முன் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி அளித்ததையிட்டு, வக்பு சபை கலாச்சார திணைக்களம் போன்றவற்றிற்கு பொதுமக்களின் இக்கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கி பொதுமக்கள் தரப்பு நீதிமன்ற அனுமதியுடன் வழக்கை ஒத்தி வைத்தனர், மேலும் இதை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் வழக்கை மீண்டும் தொடர்வதாகவும் நிபந்தனை அடிப்படையில், நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இம்முடிவுக்கு கலாச்சார திணைக்கள, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், போன்ற்றின் ஆட்சேபணைகளை நீதிமன்றம் வேண்டிய போது, இருதரப்பும் மனுதாரர்களின் இக் கோரிக்கைக்கு மனப்பூர்வமாக ஒத்துக் கொண்ட நிலையில், நீதிமன்றத்தின் முன்  இந்த முடிவுக்கு அனுமதி அளித்த நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம். இந்த முடிவுக்கு பொதுமக்கள் தரப்புக்கு அனுமதி அளித்தது. இதன்படி  நீதிமன்றம் வழக்கை தற்காலிகமாக ஒத்திவைத்தது.


மேலும் இவ்வழக்கில் கலாச்சார அமைச்சர் நான்காவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,  பள்ளிவாசலை பதிவு செய்து இதை விற்பனை செய்ய முற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை நடாத்தும் படி பணிப்பாளருக்கு கடிதம் மூலமாக உத்தரவு ஒன்றை ஏற்கனவே  பிறப்பித்திருந்தார். 


இந்நிலையில் வழக்கின் நாலாவது பிரதி வாதியான அமைச்சரின் உத்தரவை கவனத்தில்  கொண்டு, அவற்றை அமுல்படுத்தும் படியும் நீதிமன்றம் கலாச்சார திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.


அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல், அபாகரிப்பாளர்கள் தப்பிச்செல்லும் வகையில் இது தொடர்பான சபைகள் ம‌ற்றும் கலாச்சார திணைக்களம் காலத்தை இழுத்தடிப்பு செய்தது.


இதனால் மீண்டும் இந்த வழக்கை தொடர்வதற்காக   நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தியது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள மனுதாரர்களின் சட்டத்தரணி முயற்சி மேற்கொண்ட போதும் கலாச்சார அமைச்சின் சட்டத்தரணிகள் ஆலோசகர்கள்  சந்தர்ப்பங்களை தவிர்த்து தலைமறைவாகி வருகின்றனர்.


இதற்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் 06ஆம் திகதி வக்பு சபை இதை பள்ளிவாசலாக பதிவு செய்தது.


மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்த பொதுமக்களை, நம்பிக்கை பொறுப்பாளர்களாக நியமிக்காமல்,  கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இக்காணி சம்பந்தமாக அபகரிப்பாளர்களின் பெயரில் அதிகாரங்கள் பொறுப்புகள்  ஒரு அறக்கட்ளை மூலமாக எழுதப்பட்டு, அது   டிசம்பர் மாதம் 6ஆம்  திகதி தெல்கந்தை காணிப்பதிவாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டு. அதே திகதியில் அபகரிப்பாளர்களால் அமைச்சின் பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்டு, அதே திகதியில் பணிப்பாளர் கையொப்பமிட்டு, அதே  திகதி காலை பணிப்பாளர் அவர்களால் வக்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதே 06ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வக்பு சபை இவ்வறக்கட்டளைக்கு அங்கீகாரமும் வழங்கி, வக்பு சபை வக்பு  நீதிமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளது.


அதேவேளை தகவல் அறியும் உறிமை சட்டத்தின் கீழ் சில ஆவணங்களை பெற்றுக் கொள்ள பொதுமக்கள் விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும் அவை இன்னும் பொது மக்களுக்கு வழங்கப்டவில்லை. விண்ணப்பித்து இரண்டு வாரங்களில் அவை வழங்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கின்றது. எனவே எமது முஸ்லிம் கலாச்சார அதிகாரிகளின் திருப்தியற்ற நடவடிக்கை குறித்து தகவல் அறியும் ஆணையாளரின் கவணத்திற்கும் இது கொண்டுவரப்பட்டுள்ளது.


காணியை விற்பனை செய்ய முடியும் என 1139 என்ற இலக்கம் உடைய அறக்கட்டளையை டிசம்பர் 6ஆம் தேதி செல்லுபடியற்றதாக ஆக்கி,  அதே தினத்தில் 2207 என்ற இலக்கத்துடைய ஒரு அறக்கட்டளையை தமக்கு ஏற்றவாறு எழுதி இவ் அபரிப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். 


எனவே ஏற்கனவே காணி அபகரிப்பு விடயத்தில் தோல்வியடைந்த நிலையில், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக காணி அபகரிப்பாளர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கி, பின் வழியால் உள் நுழைவதற்கு வாய்ப்பளித்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி, வக்பு சபை அபகரிப்பாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.


மேலும் காணி சம்பந்தமாகவும் சர்ச்சைக்குரிய அறக்கட்டளை சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி வழக்குகளில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள 1139 என்ற அறக்கட்டளையை நீதிமன்ற அனுமதியின்றி செயலிழக்கச் செய்து, நீதிமன்றத்தில் சர்ச்சையாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் 1139 அறக்கட்டளையின் உண்மைகள் மறைக்கப்படு அனைத்தும் அறியாத வகையில் 2207 என்ற புதிய அறக்கட்டளை ஒன்றுக்கு கலாச்சார அமைச்சும் வக்பு சபையும்  அனுமதி அளித்துள்ளது. 


எனவே இவர்களின் நீதி மன்றத்தை அவமதித்தத ஊழல் சம்பந்தமான இப்போக்கை  கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை 10 ஆம் திகதி மதியம் 3 மணியளவில் வக்பு சபையின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி நீதி அமைச்சரினதும் கலாச்சார அமைச்சரினும் கவனத்தில் கொண்டுவர பொதுமக்கள் தீர்மானித்துள்ளனர்.


ஒரே நீதிமன்றத்தில், ஒரே வழக்கில், கலாச்சார அமைச்சின் சட்டத்தரணிகள், முன்னிலையில் பள்ளிவாசல் அல்ல என வாதாடியவர்களை, அவர்களின் மனுவும் கலாச்சார அமைச்சின் சட்டத்தரணிகள் மற்றும் சட்டமா அதிபர்  திணைக்கள சட்டத்தரணிகள் முன் நிராகரிக்கப்பட்ட நிலையில், பள்ளிவாசல் அல்ல என வாதாடியவர்களை, கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில்,  தற்சமயம் இது பள்ளிவாசல் அல்ல, இது தமது தனியார் சொத்து (private property) என்ன வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், இக்குறிப்பிட்ட அபகரிப்பாளர்களை இதே  பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்பாளர்களாக வக்பு  சபை எவ்வாறு அனுமதி அளித்தது.


எனவே இது இப்பொதுச் சொத்தினை பள்ளிவாசல் அல்ல என வாதாடியவர்களின் அறக்கட்டளையை கலாச்சார அமைச்சு, மற்றும் வக்பு சபை அங்கீகரித்து அவர்களை  மீ்ண்டும் ஒரு சில காலங்களில் மாற்று வழியில் அபகரிப்பாளர்கள் காணகயை அபகரிக்க வக்பு சபை வழங்கிய உத்தரவாதமாகும்.


ஏற்கனவே முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பதில்லை என்ற கருத்துக்கள் கோசங்கள் நிலவும் வேலையில் இவர்களின் இன் நடவடிக்கை அதற்கு உரமிடுதல் அமைகின்றது.


இலங்கை வரலாற்றில் வக்பு சபை நீதிமன்றத்தை அவதித்ததும், வக்பு சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுவதும் இது முதலாவது தடைவையாகும்.


வக்பு சபை மற்றும் கலாச்சார அமைச்சு ஆகியவற்றின் சில அதிகாரிகளின் ஊழல் போக்கின் காரணமாக கடந்த காலங்களில் பொதுச் சொத்துக்கள் தொடர்பான மற்றும் பள்ளிவாசல்களின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் சம்பந்தமான பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கின்றது .


எனவே இவ்ஆர்பாட்த்தில் இவர்களால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளும்படி பொதுமக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.