இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (17) மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 09.30 மணி நிலவரப்படி கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக பதிவாகியுள்ளது.
அனுராதபுரம், கண்டி, நீர்கொழும்பு, மிரிஹான மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை கோரியுள்ளது.