சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,740 ரூபாவாகும்.
அத்துடன், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,900 ரூபாவாகும்.