மகளை நிர்வாணமாக படமெடுக்க முயன்ற கொடூரம்; கணவனை மனைவி படுகொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மகளை நிர்வாணமாக படமெடுக்க முயன்ற கொடூரம்; கணவனை மனைவி படுகொலை!

தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர், வெளியே வந்தபோது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.