இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புலிகளின் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த எதிரி கோட்டைக்குள் வண்டி ஓட்டிய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் இன்றைய தினம் (10) பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் வத்தளை ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் விடுமுறைக்காக மாத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர்.