உலகின் மிக வயதான ஆமையின் 191 ஆவது பிறந்த நாள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகின் மிக வயதான ஆமையின் 191 ஆவது பிறந்த நாள்!


செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது.


ஜோனாதன் என அழைக்கப்படும் குறித்த ஆமை கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.


வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.


இது தொடர்பான காணொளியை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.


ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.