காதல் என மயக்கி 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது இளைஞன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதல் என மயக்கி 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது இளைஞன்!


குருநாகலை, தோறயாய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமி 32 வயதுடைய இளைஞனுடன் காதல் வசப்பட்டிருந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு உரிய வயது வந்ததும் சிறுமியை திருமணம் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.


குருநாகல், பிரியங்கரம பிரதேசத்தில் தனது மாமியுடன் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை, மாமி வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டினுள் நுழைந்து காதலன் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். 


சிறுமி கூச்சலிட்டதையடுத்து அயலர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காதலனான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இவ் விடயமாக பிரியங்கரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.