பாராளுமன்ற சபைக்குள் இருந்து கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக சபை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களுக்கு அஞ்சல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து காலை 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை காலை 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.