ஊவா மாகாணத்தில் தரம் 01 முதல் தரம் 05 வரையிலான மாணவர்களுக்கு வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் கட்டணம் அறவிடும் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலையின் நேரத்தின் பின்னர் கட்டணம் அறவீடு செய்து நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் முழுமையாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு, வலயக் கல்வி பணிமனை, அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.