மொஹமட் நஸீர் மொஹமட் ஆதில் என்ற சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு இலங்கை சுங்கம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
சுங்கம் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக சந்தேகத்தில் ஒருவரை சுங்க அதிகாரிகள் தேடி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் காமல்வத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
எனவே, இந்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112471471, 0112431854, 0704387112 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.