மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!


இஸ்ரேல் - பலஸ்தீன மோதலால் ஏற்பட்டிருக்கும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உடனடி உதவிகளுக்காகத் தொடர்பு கொள்ளக்கூடிய அவசர தொலைபேசி இலக்கங்களை வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கிடையில் நடந்து வரும் மோதல் நிலையின் விளைவாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தை சுற்றியிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளது.


எனவே மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும்/பணிபுரியும் இலங்கையர்கள் தற்போதைய பதற்ற சூழ்நிலையில் அவசர உதவிகளுக்காகத் தம்மைத் தொடர்புகொள்வதற்கென கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகார சேவை பிரிவு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் +94 711 757 536  அல்லது +94 711 466 585 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வெளிவிவகார அமைச்சைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.


இதற்கு மேலதிகமாக வழமையான வேலை நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது repatriation.consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகார சேவை பிரிவைத் தொடர்பு கொள்ளமுடியும். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.