பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரபு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் வோல்கர் துர்க், "மருத்துவமனைகள் புனிதமானவை, அவை எந்த சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த படுகொலையின் முழு அளவு எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் தாக்குதல்களும், படுகொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது" என்றார்.
"இந்த பயங்கர சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர செல்வாக்குள்ள அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகள் உரியவர்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும்" என்றார்.