ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை சீனாவுக்கு மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, சீனாவில் இடம்பெற்றுவரும் சர்வதேச ஒத்துழைப்புக்கான 03 ஆவது “ஒரே மண்டலம் – ஒரே பாதை” மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீன ஜனாதிபதி மற்றும் சிலரை சந்திக்கவுள்ளதோடு, கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோனும், பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கனக ஹேரத் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவால் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி சுற்றாடல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.